டிவி சேனல்களை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது : பேரவை நேரலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2023, 9:19 pm
Quick Share

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவித்த நிலையில், எதிர்க்கட்சியினரின் கேள்விகள் ஒளிபரப்பப்படாமல் அமைச்சர்கள் பதிலளிப்பது மட்டும் ஒளிபரப்பப்படுவதாக குற்றம் சாட்டி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பாதது ஏன் என்பது குறித்த கேள்விக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியுள்ளார். அதில் சட்டமன்ற விவாதங்களை ஒளிபரப்புவது அந்தந்த தொலைக்காட்சிகளின் விருப்பத்தை பொறுத்தது. எதையெல்லாம் ஒளிபரப்ப வேண்டும் என்று தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது என பதிலளித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பதிலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 370

    0

    0