அண்ணனோட பிறந்தநாளில் ஆம்ஸ்டிராங்கை கொலை செய்தோம்.. பழிக்கு பழி : கைதான 8 பேர் பரபர வாக்குமூலம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 July 2024, 10:58 am

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ்நாடு தலைவராக இருந்து வருகிறார் இந்த நிலையில் இன்று மாலை மர்ம நபர்கள் அவருடைய வீட்டின் அருகிலேயே/வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த செம்பியம் போலீசார் அவரை மீட்டு ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்டிராங் கொலை சம்பவம் தொடர்பாக 4 மணி நேரத்தில் 8 பேர் து செய்யப்பட்டுள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

அதாவது, பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறுகின்றனர். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரோட்டா கடையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் பயங்கரமான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அவர் புளியந்ததோப்பை சேர்ந்த மாதவன் என்பது தெரியவந்தது. மேலும் மாதவன் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் நண்பர் என தெரியவந்துள்ளது.

கொலை வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய ஆற்காடு சுரேஷை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொண்னறது. இதை தடுக்க முயன்ற மாதவனுக்கும் வெட்டு விந்தது.

ஆற்காடு சுரேண் வழக்கில் அதிமுக பிரமுகரான ஜோகன் கென்னடி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அதில் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தொடர்ந்து காயமடைந்த மாதவன் பரோட்ட கடைக்கு சாப்பிட வரும் போது கொலை செய்யப்ப்டடார். இவர் ஆற்காடு சுரேஷ் கொலையில் சாட்சியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஆற்காடு சுரேஷ் கொலையும், ஆம்ஸ்டிராங் கொலையும் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் வழக்கில் ஆர்ம்ஸ்ட்ராங் பின்னணியில் இருந்து செயல்பட்டதாகவும் இதனால் அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக உளவுத்துறை காவல்துறையை எச்சரித்ததாகவும் காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங்குக்கு இந்த தகவலை சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியாக பழிக்குப் பழி கொலை சம்பவங்களால் தலைநகர் சென்னை மீண்டும் கிரைம் நகரமாக மாறி இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர் சென்னை வாசிகள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 316

    0

    0