உங்களுக்கு நாங்க தான் ஓட்டு போட்டோம்… எங்களுக்கு பதில் சொல்லுங்க : வீட்டுக்கே சென்று மேயர் பிரியாவை முற்றுகையிட்ட மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2023, 3:51 pm

உங்களுக்கு நாங்க தான் ஓட்டு போட்டோம்… எங்களுக்கு பதில் சொல்லுங்க : மேயர் பிரியா ராஜனை வீட்டுக்கே சென்று முற்றுகையிட்ட மக்கள்!

சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் மழை வெள்ளப் பகுதிகளை பார்வையிடுவதற்காக புறப்பட தயாராக இருந்த நேரத்தில் திரு. வி.க நகர் தொகுதிக்குட்பட்ட 71வது வார்டு கிருஷ் ண தாஸ் சாலை, மங்களபுரம், திருவள்ளுவர் தெரு, ஏகாந்திபுரம், அம்பேத்கார் தெரு, பனை மரத் தொட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மேயர் பிரியாராஜனை முற்றுகையிட்டு தொடர்ந்து 3 நாட்களாக மின்சாரம் இல்லை குடிப்பதற்கு குடி நீர் இல்லை, கழிவுநீர் செல்ல வழிவகை இல்லை, மழை நீர் அகற்றப்படவில் லை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அவரை போராட்டத் தில் ஈடுபட்ட னர்.

சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் மழை வெள்ளப் பகுதிகளை பார் வையிடுவதற்காக தனது பணியினை துவங்க இருந்த நேரத்தில் அந்தப் பகுதி மக்கள் எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிவிட்டு நீங்கள் மக்கள் பணியை பாருங்கள் உங்கள் பகுதி யைச் சேர்ந்த நாங்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறோம்,.

முதலில் எங்களுடைய குறைகளை தீர்த்துவிட்டு பிறகு சென்னை மக்களின் குறைகளை கவனியுங்கள் என்றும் நீங்கள் மாமன்ற உறுப்பினராக, பிறகு சென்னை மேயராக நீங்கள் பதவி உயர் பெற்றது எங்களால் தான் எனக் கூறி முதலில் எங்களது பிரச்சி னையை நீங்கள் தீர்க்க வேண்டும் என வாக்குவாத த்தில் ஈடுபட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்ற சென்னை மாநகர மேயர் பிரியா எவ்வளவு முயன்றும் மேயரின் பேச் சை யாரும் அங்கு காது கொடுத்து கேட்பதாக தெரி யவில்லை.

இதனால் அதிர்ச்சி அடை ந்த மேயர் பிரியா ராஜன் எனக்கு கால அவகாசம் கொடுங்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து பேசி உங்கள் பிரச்சனைகளை சரி செய்ய 100% முயற்சியை மேற்கொ ள்கின்றேன் நான் உங்கள் பகுதியில் வளர்ந்த பெண் நான் கொடுத்த வாக்கை நிச்சயம் காப்பாற்றுவேன் என உறுதிமொழி அளித் ததை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்

சென்னை மாநகர மிகப் பிரியா ராஜனை முற்று கையிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!