எந்த இசையாக இருந்தாலும் தமிழசை வேண்டும் : சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 10:01 pm

சென்னை டி.டி.கே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டுவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மார்கழி மாதம் முழுவதும் நடக்க உள்ள கச்சேரியில் 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் அரங்கேற்றம் நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு, 4 இசைக் கச்சேரிகள் நடைபெறும் மார்கழி இசைத் திருவிழாவை தொடங்கி வைத்தபின், இசைத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

தொடர்ந்து சென்னையில் 96-வது மார்கழி இசை திருவிழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தமிழர்களின் இசை வடிவம் பழமையானது. செழுமையானது. தொல்காப்பியம் காலத்திற்கு முன்பே தமிழ் இசை வடிவம் இருந்து வருகிறது.

உலகில் உள்ள இசை கலைஞர்களை சென்னைக்கு அழைக்கும் வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்பது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி, தனிமனித கொள்கையாக மாற வேண்டும்.

இதுதான் இன்றைய நாட்டிற்கு தேவையானதாக உள்ளது. எந்த இசை மன்றமாக இருந்தாலும், எந்த வகை இசையாக இருந்தாலும் தமிழிற்கு முன்னுரிமை வழங்குங்கள். தமிழிசை தவறாது ஒலிக்க வேண்டும்.

பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும், அது தமிழ் இசையாக இருக்க வேண்டும். நான் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் எந்தவித பரபரப்பும், டென்ஷனும் இல்லாமல் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுதான் என்று தெரிவித்தார்.

  • I haven't lived with my husband for even a year actress sukanya Felt புருஷனோட ஒரு வருஷம் கூட வாழல… கீழ்த்தரமா, கேவலமா பேசினாங்க : மனம் நொந்த சுகன்யா!