எத்தனை தடுப்பணைகளை கட்ட முடியுமோ அத்தனையும் கட்டுவோம் ; திமுக அரசை அலற விடும் ஆந்திர அரசு!
Author: Udayachandran RadhaKrishnan25 June 2024, 6:49 pm
ஆட்சிக்கு வந்தபின் சந்திரபாபு நாயுடு இன்று தன்னுடைய சொந்த தொகுதியான குற்றம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது ஸ்ரீசைலம் அணையில் இருந்து ஆந்திராவின் ராயல் சீமா பகுதிகளில் நிர்வாகம் திட்டங்களை மேற்கொள்ள அமைக்கப்படும் ஹந்திரி நிவா கால்வாய் பணிகளை பார்வையிட்ட அவர் இந்த பணிகள் விரைவு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு குப்பம் வரை சிசையில மழையில் இருந்து தண்ணீர் வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
மேலும் இத்திட்ட மூலம் கிருஷ்ணா நதியில் இருந்து சுமார் 720 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரம்மாண்ட கால்வாய் அமைக்கப்பட்டு அனந்தபுரம், கடப்பா, கர்னூல், சித்தூர் போன்ற மாவட்டங்களில் 33 லட்சம் மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பயன்பாட்டுக்காக தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. குப்பம் தொகுதி கால்வாய் அமைப்பதற்கு மட்டும் 474 கோடி நிதி ஒதுக்கி இரண்டு டிஎம்சி தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும் கண் துடைப்பிற்காக நீர் கொண்டு வந்ததாக ஜெகன்மோகன் மக்களை ஏமாற்றியதாகவும் எஞ்சி உள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
குப்பம் தொகுதிக்கு கிருஷ்ணா நீர் கொண்டுவரப்படுவதன் மூலம் இங்குள்ள 74 ஏரிகளில் தேக்கி அந்த தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்துவோம் என்றும் பாலாற்றில் எத்தனை தடுப்பணைகள் கட்ட வாய்ப்புகள் உள்ளதோ அத்தனை இடங்களிலும் அணைகளை கட்டி உங்களுடைய நிலங்களுக்கு பாசன வசதி அளிப்போம் என்று அப்போது கூறினார்.
0
0