உங்க அடக்குமுறைகளுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம் : சர்வாதிகாரத்தனத்தை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள்.. அண்ணாமலை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 9:48 am

அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம் என கோவை மாவட்ட பாஜக தலைவர் கைதுக்கு அண்ணாமலை டுவிட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை.

வெறுப்பை உமிழும் ஆ.ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி அவர்களை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்?

திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.என பதிவிட்டுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்