இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்… அதை திசை திருப்பவே இந்த ரெய்டு : ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2023, 2:48 pm

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவினர் 2000 ரூபாய் நோட்டுகளைத்தான் விநியோகித்துள்ளது குறித்து ஆதாரம் கிடைத்துள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் தோல்வி பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுமன் பெயரை சொல்லி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முயன்ற பிரதமரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கர்நாடக தேர்தல் முடிவு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ, வருமானவரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுகின்றனர். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன.

சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை. தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடு தொடர்பான செய்திகளை திசை திருப்பவே ரெய்டு என ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியை முடக்க வேண்டும் என்பதற்காகவே வருமான வரி சோதனை நடைபெறுகிறது. வருமான வரி சோதனை பற்றி கவலையில்லை.

பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியலையே இது காட்டுகிறது. காவல்துறைக்கு தெரிவிக்காமல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு ஆர்.எஸ்.பாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் முயற்சிகள் மக்கள் மத்தியில் நல்ல விதமாக சென்றுவரும் நிலையில் பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

எத்தனை ரெய்டுகள் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும், அதைப்பற்றி கவலை இல்லை. திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் ரெய்டுக்கு சென்றார்களா? என சந்தேகம் எழுகிறது ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…