மனதை உலுக்கும் வயநாடு மரணம்; பலி எண்ணிக்கை 270 ஐ தாண்டியது; 200 பேரை காணவில்லை…!!

Author: Sudha
1 ஆகஸ்ட் 2024, 9:59 காலை
Quick Share

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 270-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஏராளமானோர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் 200 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணூரர்,கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

மேலும், வட கேரளாவில் கனமழைக்கான தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்கள் கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலப்புரம்,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

  • Vanathi தமிழிசை மீது தரம்தாழ்ந்த விமர்சனம்.. திருமா மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் DEMAND!
  • Views: - 200

    0

    0