மேற்கு வங்க அரசியலின் கிங்: முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்: தலைவர்கள் இரங்கல்…!!

Author: Sudha
8 August 2024, 11:42 am

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்தார்.இரண்டு அறைகள் கொண்ட அரசு குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார்.

1977 முதல் 2011 வரை மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியில் முக்கிய நபராக விளங்கிய இவர், 2000 முதல் 2011 வரை மாநிலத்தின் முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த இடது முன்னணி ஆரசு காலத்தில் பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி CPM முதலமைச்சராக இருந்தார். அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றினார்.

மேற்கு வங்கத்தில் கடைசி முதல்வராகப் பதவிவகித்த கம்யூனிஸ்ட் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா, 2016-க்கு பிறகு தேர்தல் பிரச்சார மேடைகளில் தோன்றவில்லை.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, கடந்த சில ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறுவது அரிது. அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு சி.பி.எம் பேரணிக்கு சென்றார்.ஆனால் தூசி ஒவ்வாமை காரணமாக பேரணியில் கலந்து கொள்ள முடியாமல் வீடு திரும்பினார்.2021 சட்டமன்றத் தேர்தலின்போது கூட அவரின் ஆடியோ க்ளிப் வெளியிடப்பட்டது.

அதற்குப் பிறகு, கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலின்போது புத்ததேவ் பட்டாச்சார்யா, கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்பது போல AI தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை கட்சி வெளியிட்டிருந்தது. இத்தகைய சூழலில், கடந்த பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்தார்.அவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 346

    0

    0