கனமழையால் மேற்கு மாம்பலம் பகுதி பாதிப்பு… ஊத்தும் பேய் மழை.. வாட்ஸ் அப் நம்பர் அறிவித்த மாநகராட்சி!!
கனமழையால் சென்னை முழுக்க 145 இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், அதில் 68 இடங்களில் முழுமையாக மழைநீர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், எஞ்சிய 77 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
அந்தவகையில், மழை தொடர்ந்து பெய்து வந்தால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் அபாயம் இருக்கும் நிலையில், அவற்றை மோட்டார் மூலம் வெளியேற்றவும் தயார் நிலையில் 296 மோட்டார்கள் உள்ளதாகவும், 40 மோட்டார்கள் இப்போது தேங்கியுள்ள நீரை வெளியேற்றப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
மழை நீடிப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன், சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், 1913 என்ற இலவச உதவி எண்ணை நேற்றிரவு அறிவித்திருந்தது சென்னை மாநகராட்சி.
அதேபோல. 044 25619204, 044 25619206, 044 25619207, ஆகிய எண்களிலும், 94454 77205 என்ற வாட்ஸ்அப் நம்பரிலும் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டிருந்தது.
இப்போது மேலும் கூடுதலான இலவச உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், +91 94454 7720 என்ற வாட்ஸ் அப் நம்பரை வெளியிட்டிருக்கிறது.. இந்த எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என்றும், பொதுமக்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இருக்கிறோம் என்றும் மாநகராட்சி நிர்வாகம், சென்னைவாசிகளுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.