பாஜக பாச்சா பலிக்காது… அவங்க நினைக்கறது இங்க நடக்காது : நாடாளுமன்றத்தில் கொந்தளித்த கனிமொழி எம்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 4:48 pm

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பரபரப்பாக பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, மராட்டியம், தமிழகம், கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கவர்னர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை; ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை. அதானி பற்றிய அறிக்கையை இந்தியாவுக்கு எதிரானதாக எப்படி கருத முடியும்.

முன்னதாக பாஜக உறுப்பினர் ஜோஷி பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து வருத்தப்பட வைக்கிறது. உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்பட வைக்கும் செயல்.

ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது.

மத்திய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்கிறது, இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது என்றார்.

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!