உங்க ஆட்சியில் என்ன செஞ்சீங்க… அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பேசாதீங்க : ஜெயக்குமாருக்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2023, 10:26 am

பாண்டிய மன்னர்களின் சின்னமாக திகழ்ந்த மீன் சின்னம் சிலையை எங்கே வைப்பது என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் ஆலோசனை நடத்தினார்கள்.

குழுவின் தலைவர் மூத்த வழக்கறிஞர் காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த், மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் கே.ராஜு, ராஜன் செல்லப்பா, தளபதி ஆகியோரும் காவல்துறை, மாநகராட்சி, ரயில்வேத்துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

மதுரை ரயில் நிலையம் முன் 1999 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் 3 டன் எடை கொண்ட மீன் சின்னத்தின் சிலை வைக்கப்பட்டு இருந்தது,

2019 ஆம் ஆண்டு ரயில் நிலைய கட்டுமான பணிகளுக்காக மீன்கள் சிலை அகற்றப்பட்டது, அகற்றப்பட்ட மீன் சின்னங்கள் சிலையை எங்கே வைப்பது என ஆலோசித்து முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில், மீன் சின்னம் பாண்டிய மன்னர்களின் சின்னம், சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்ட சின்னம், மதுரை மாநகராட்சிக்குள் பொருத்தமான இடத்தில் மீன் சின்னத்தை நிறுவ ஆலோசிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை, 3 இடங்களை ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க உள்ளோம். ரயில்வே நிர்வாகம் மத ரீதியான சின்னங்களை வைக்க அனுமதி மறுக்கிறார்கள், தனித்த அடையாளமாக உள்ள மீன் சின்னத்தை வைக்க ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

மதுரை ரயில் நிலையத்தில் புதிய கட்டுமானம் அமைய உள்ளது. அக்கட்டடத்தில் மதுரையின் அடையாளமான மீன் சின்னத்தை வைக்க வேண்டும். கன்னியாகுமரியில் 10 ஆண்டுகளாக திருவள்ளூர் சிலையை பராமரிக்காமல் இருந்தது அனைவருக்கும் தெரியும்.

நூலகத்திற்க்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நீதிமன்றம் தலையிட்டு பாரமரிப்பு பணிகளை செய்ய வைத்ததது.

அதிமுக ஆட்சி காலத்தில் 2016 ல் மதுரையில் 6 கோடி மதிப்பில் நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது, அப்படி நூலகத்தை கட்டி திருவள்ளூர் பெயரை வைத்து இருக்கலாம். கலைஞர் நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயரை வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காழ்புணர்ச்சி காரணமாக பேசி இருக்கிறார் என கூறினார்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!