ரூ.4 ஆயிரம் கோடிக்கு சென்னையில் என்ன வேலை நடந்துச்சு? நீதிபதி தலைமையில் ஆடிட்.. திமுகவுக்கு மீண்டும் செக் வைக்கும் அண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan7 December 2023, 7:29 pm
ரூ.4 ஆயிரம் கோடிக்கு சென்னையில் என்ன வேலை நடந்துச்சு? நீதிபதி தலைமையில் ஆடிட்.. திமுகவுக்கு மீண்டும் செக் வைக்கும் அண்ணாமலை!
சென்னை வெள்ளம் குறித்து திமுக அரசிடம் கேட்க நிறைய கேள்விகள் இருப்பதாகவும் ஆனால் இந்தச் சூழலில் அரசியல் வேண்டாம் என்பதால் தவிர்த்து வருவதாகவும் இயல்பு நிலை திரும்பிய பிறகு கேட்போம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது இதனைக் கூறினார். மத்திய அரசு கொடுத்த பணமெல்லாம் எங்கே, யார் ஒப்பந்ததாரர், என்ன பணிகள் நடந்தது, எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை எல்லாம் சிட்டிங் நீதிபதி தலைமையில் ஆடிட் செய்ய வேண்டும் என்றும் இதனை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா எனவும் சவால் விடுத்துள்ளார்.
திருப்புகழ் ஐ.ஏ.எஸ்.ஸை பற்றி குறை சொல்லவோ விமர்சிக்கவோ முடியாது என்றும் அவர் அப்பழுக்கற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் அவர் கொடுத்தப்படி திட்ட அறிக்கையை தமிழக அரசு செயல்படுத்தியதா என்பது தான் கேள்வி எனவும் அண்ணாமலை எழுப்பியுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் திமுக அரசின் ரூ.4,000 கோடி செலவு குறித்து தாங்கள் கேள்விகளை முன் வைப்போம் எனக் கூறிய அண்ணாமலை, மாநிலத்தின் தலைநகரிலேயே இப்படி வெள்ளம் வருகிறது என்றால் தமிழ்நாட்டிற்கு எப்படி உலக முதலீட்டாளர்கள் வருவார்கள் அவர்கள் எப்படி இங்கு தொழிற்சாலைகள் அமைப்பார்கள் என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் அண்ணாமலை.
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார் என பெருமிதம் தெரிவித்தார் அண்ணாமலை.