கர்ப்பிணி பெண் காவலருக்கு நேர்ந்த அவலம்… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2023, 10:52 am

திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே இந்த நிலையா என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் திமுக பொதுகூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த திமுகவினரின் பரபரப்பு அடங்குவதற்குள் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் கர்பிணி பெண் காவலரை வெயிலில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடுத்தி கொடுமை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

காவலர்களுக்கு பணிசுமைகளை வழங்கி அலைகழித்துவரும் திமுக அரசு, இதனால் தமிழகத்தில் காவல்துறையினர் சிறப்பாக செயல்முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் இன்று நாடுமுழுவதும், குட்கா,கஞ்சா, போதை மாத்திரைகளின் புழக்கம் அதிகரித்துள்ளதுடன், வழிப்பறி,கொள்ளை போன்ற சம்பவங்களும் அதிகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வரும் நிறைமாத கர்பிணியான பெண் காவலரை சிறிதும் மனசாட்சி இல்லாமல் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணிக்கு உட்படுத்திதுள்ளனர் உயர் காவல் துறையினர்.

அந்த பெண் காவலர் வாகனங்களில் இருந்து வரும் புகையை தாங்கிக்கொள்ள முடியாமலும், தூசிகளை சுவாசிக்க முடியாமலும் கடும் வெயிலில் பாதுகாப்பில்லாமல் பணியாற்றி வருவது காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

மேலும் அந்த பகுதியில் அரசு மதுபான கடையும் உள்ளதால் குடிமகன்களையும் எதிர்கொண்டு பணியாற்றி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://vimeo.com/788166545

திமுக ஆட்சியில் காவலர்களின் நிலையே இப்படி என்றால் சாதாரண மக்களின் நிலையை நினைத்தாலே அச்சமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 583

    0

    0