நமீதாவுக்கு நடந்த சம்பவம்.. பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு!!
Author: Udayachandran RadhaKrishnan27 August 2024, 6:11 pm
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற போது அவமானத்தை சந்தித்ததாக நமீதா வீடியோ மூலம் நேற்று பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்ததாவது: நடிகை நமீதாவை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்க கெடுபிடிகள் இருந்ததாக அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார். அந்த பதிவில் என்னையும் இணைத்து தனது ஆதங்கத்தை கொட்டினார். நடிகை நமீதா கூறிய புகார் விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர்கள் மனம் புண்படும்படியாகவோ, சட்டவிரோதமாகவோ ஏதேனும் நடந்தது கண்டறியப்பட்டால் உடனடியாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். சகோதரி நமீதா வருத்தப்பட வேண்டாம். ஒரு வேளை அவர் பெரிய அளவில் வருத்தப்பட்டிருந்தால் அதற்காக நாங்களும் வருந்துகிறோம் என சேகர் பாபு தெரிவித்துள்ளார்.