செந்தில்பாலாஜிக்கு சிறையில் என்னாச்சு? முதலில் ஸ்டான்லி… பின்னர் ஓமந்தூரார் : அவசர அவசரமாக மருத்துவமனை மாற்றம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2023, 10:01 pm

செந்தில்பாலாஜிக்கு சிறையில் என்னாச்சு? முதலில் ஸ்டான்லி… பின்னர் ஓமந்தூரார் : அவசர அவசரமாக மருத்துவமனை மாற்றம்!!!

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று ( 15 ம் தேதி) மதியம் உணவு உட்கொண்ட போது வாந்தி, எடுத்ததாகவும் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட அவர் மருத்துவமனைக்குள் வீல் சேர் மூலம் அழைத்து செல்லப்பட்டார். நாளை மாலை வரை மருத்துவ சிகிச்சையில் இருப்பார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்குஒரு மணிநேரம் வரையில் இசிஜி , எக்ஸ்ரே , ரத்தப்பரிசோதனை போன்றவை சோதனை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் இருதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதயம் மற்றும் கழுத்து வலிப்பதாக அவர் கூறிய நிலையில் அந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 324

    0

    0