வைகோவுக்கு என்னாச்சு?.. விமானம் மூலம் சென்னை அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2024, 3:03 pm

நாகர்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பதாக இருந்தது.

ஆனால், இன்று வைகோ திருமண விழாவிற்கு வரவில்லை.வைகோவிற்கு பதிலாக அவரது மகனும் மதிமுகவின் தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ பங்கேற்றார்.

திருமண விழாவில் பங்கேற்று பேசும் போது, வைகோ திருமண விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து பேசினார். துரை வைகோ கூறியதாவது:- கலிங்கப்பட்டியில் உள்ள வீட்டில் இருந்து திருமண விழாவில் பங்கேற்க வைகோ புறப்பட்டு கொண்டு இருந்த போது திடீரென கீழே தவறி விழுந்து விட்டதாகவும் இதனால் தோள்பட்டையில் சிராய்ப்பு ஏற்பட்டு வைகோவிற்கு காயம் ஏற்பட்டது.

மேலும் படிக்க: மதுரை – துபாய் விமானம் ரத்து : SPICE JET விமானம் அறிவிப்பு… கடுப்பான பயணிகள் வாக்குவாதம்!

இதனால் சிகிச்சைக்காக அங்கிருந்து அவசர அவசரமாக தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் தான் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை” என்று கூறினார்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!