நோபல் ஸ்டீல் நிறுவனத்துக்கும், உதயநிதி அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு? பதில் வருமா? அண்ணாமலை அட்டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 5:31 pm

உதயநிதி அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்த நிலையில் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி அறக்கட்டளைக்குச் சொந்தமான, 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை நேற்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘’ திமுக மீதான குற்றச்சாட்டுகளை வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம்.

முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை. முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது.

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதற்காவது பதில் வருமா?’’ என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Tamil cinema re-release movies ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!