சும்மா சும்மா என்கவுண்டர் பண்ணா காவல்துறைக்கும் கூலிப்படைக்கும் என்ன வித்தியாசம்? கார்த்தி சிதம்பரம் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2024, 2:22 pm

காரைக்குடியில் கார்த்தி எம்.பி., செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது பா.ஜ., கடந்த காலத்தை போலவே வருங்காலங்களிலும் மக்களை வஞ்சிப்பார்கள். எந்த மாற்றமும் இருக்காது.வரும் பட்ஜெட் ஏமாற்றம்தான் தரும்.

மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆன பின்பு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று நினைத்தோம் அதிலும் இல்லை. நீட் இந்தியாவிற்கு தேவையில்லை. நீட்டுக்கு எதிராக பாராளமன்றத்தில் குரல் கொடுப்போம். எமர்ஜென்சி கொண்டு வந்தது தவறு என்று இந்திரா காந்தியே தெரிவித்துள்ளார் நாங்கள் செய்த தவறை ஒப்புக் கொண்டோம் ஆனால் பாஜக எந்த தவறையாது ஒத்துக் கொண்டுள்ளார்களா? என கேள்வி எழுப்பினார்

மின் கட்டண உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரியத்தின் கடன் சுமையை குறைத்தால் தான் மின் கட்டணத்தை குறைக்க முடியும். 25 ஆண்டுகளாக எந்த அரசும் இதை செய்யவில்லை. தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்துக்கள் நடக்கிறது.

தமிழகத்தில் தொடர் கொலைச் சம்பவம் நடப்பது வருத்தமளிக்கிறது. திடீரென்று 77 ரவுடிகளை அரெஸ்ட் செய்ததாக தெரிவித்துள்ளனர். இவ்வளவு நாளாக இந்த ரவுடிகள் இருந்தது காவல்துறைக்கு தெரிந்து தானே இருக்கிறது. கூலிப்படை மூலம் நடைபெறும் கொலைகளை கட்டுப்படுத்தும் கடமை அரசுக்கு உண்டு. ஆனால் இதற்கு தீர்வு என்கவுன்டர் கிடையாது. என்கவுண்டரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அப்படி செய்தால் கூலிப்படைக்கும் காவல் துறைக்கும் வித்யாசம் இல்லாமல் போய்விடும். குற்றவாளிகளை உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 255

    0

    0