எப்படி இருந்த நீங்க.. இப்படி ஆகிட்டீங்க : எலும்பு தோலுமாக உள்ள நித்தியானந்தாவுக்கு என்ன நோய்? கைலாசா பரபரப்பு விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2022, 5:30 pm

கைலாசாவில் தங்கியிருப்பதாக கூறப்படும் நித்யானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான போட்டோ வைரலாகி வரும் நிலையில் கைலாசாவில் இருந்து வெளியான கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Even though this is a jewelry board, I can't resist repining this stunning  photo of my Gurudeva, Swamiji Nithyananda. He is radiating… | Shakti, Hindu  dharma, Shiva

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா சர்ச்சை வீடியோ ஒன்றில் சிக்கியதை அடுத்து அடுத்தடுத்து அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாலியல் பலாத்காரம் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.

Controversial heroine Ranjitha' !! The current life of the incredible  actress!!

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா, கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாகவும் அதன் அதிபராக தன்னைத்தானே பிரகடனம் செய்து கொண்டார்.

Karnataka court cancels bail granted to self-styled godman Nithyananda

கைலாசாவில் இருந்து பல வீடியோக்களை வெளியிட்டு நித்யானந்தா, தென் அமெரிக்க கண்டத்தல் ஒரு தீவை விலைக்கு வாங்கியதாக சொகுசுக் கப்பல்கள் இலவர் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகின

Nithyananda Likely In Jamaica, 'accidental Death' Of Counterpart Raises  Questions

இந்த நிலையில் நித்யானந்தா மரணம் அடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி அதிர்ச்சியையிம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நான் இன்னும் மரணமடையவில்லை என அவர் கைப்பட எழுதிய கடிதமும், புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை அடக்கியுள்ளது. ஆனால் அவர் அந்த புகைப்படத்தல் எலும்பும் தோலுமாய் காணப்படுவதை பார்த்த நெட்டிசன்கள் பேசுப்பொருளாக மாற்றியுள்ளனர்.

நான் இன்னும் சாகவில்லை... 27 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்' -  நித்யானந்தா விளக்கம் | I am not dead yet Nithyananda Description – News18  Tamil

நித்யானந்தா எழுதிய கடிதத்தில் பரமசிவனின் ஆசிகள், என் ஹேட்டர்கள் நான் இறந்துவிட்டதாக புரளியை கிளப்புகின்றனர், அதை நம்பவேண்டாம், சமாதியில் இருக்கிறேன், ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

இன்னும் கைலாசத்தின் அதிர்வுகள் மனநிலையில் அதிகமாக உள்ளது. சந்தேகிப்பவர்கள், புகைப்படங்கள் போலியானவை என நீங்கள் உணர்ந்தாலும், திருவண்ணாமலை அருணகிரி யோகேஸ்வர சமாதிக்குச் சென்று விளக்கு ஏற்றுங்கள், நீங்கள் என்னைத் தெளிவாகப் பார்ப்பீர்கள்.

திருப்பதியில் விஐபி தரிசனம் செய்த நித்யானந்தா – ரஞ்சிதா | Swami Nithyananda  prays at Tirumala with Ranjita in tow - Tamil Oneindia

என்னைக் கண்காணித்து, ஆதரவு தந்து, உதவி செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி. இன்னும் சிகிச்சையில் இருந்து வெளியில் வரவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்கள் என்பதை விட என் பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைப் போன்றவர்கள். மனித உடல் மற்றும் மனதின் மீது சூப்பர் நனவின் தாக்கத்தைப் படிப்பதில் என்னுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள்.

Where Is Nithyananda? Ecuador Denies Giving 'Kailaasa Land'; Says Rape  Accused Off To Haiti Now

எனது நித்ய சிவ பூஜை மட்டும் தினமும் தவறாமல் நடக்கிறது, ஆனால் இன்னும் சாப்பிடுவதும் தூங்குவதும் தொடங்கவில்லை. நித்ய பூஜைக்காக நான் சமாதியிலிருந்து வரும்போது மட்டும், ​​சில சமயங்களில் உங்கள் கருத்துகளைப் பார்த்து என் பதிலைத் தருகிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி, நலம் பெற வாழ்த்திய பக்தர்கள் அனைவருக்கும் நன்றி.

మరో వివాదం: నిత్యానంద ఆశ్రమంలో యువతి శవం | Fresh trouble for Nithyananda,  24 year old found dead in ashram - Telugu Oneindia

ஆனால் உண்மையில் எனக்கு நோயெல்லாம் ஒன்றும் இல்லை. இது உடலின் வழியாகச் செயல்படும் ஒரு காஸ்மோஸ் போன்றது. மருத்துவர்களால் எந்த நோயையும், கோளாறுகளையும் இன்னும் என் உடலில் இருந்து கண்டறிய முடியவில்லை.மேலும் புகைப்படங்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு காத்திருங்கள். மகிழுங்கள், பகிருங்கள் & கொண்டாடுங்கள்!: என பதிவிட்டுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1526

    0

    0