திராவிட மாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்களுக்கு என்ன பெயர்? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2023, 5:51 pm

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் உள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அது முடிவுக்கு வரும் போது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது பழிவாங்கும் செயல் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திராவிடமாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்கள் எல்லாம் குடிகாரர்கள் என அழைக்கப்படமாட்டார்கள். கர்நாடகா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை பிரச்னை குறித்து ஏன் பேசவில்லை? காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவர முயற்சி செய்து நடவடிக்கை எடுத்தது பாஜகதான்; மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதற்கு பாஜகதான் காரணம் என தெரிவித்துளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!