வீதிக்கு வீதி டாஸ்மாக் திறந்து வைத்து என்ன பிரயோஜனம்? திமுக அரசை விமர்சித்த வானதி சீனிவாசன்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2024, 7:53 pm

கரூர் தனியார் மஹாலில் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஆய்வு கூட்டம் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் : கடந்த தேர்தலின் போது பாஜக பெற்று வாக்குகளை விட தற்பொழுது வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது நான்கு எம்எல்ஏ-க்களும், தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை விட பாஜக ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் பாஜக கேள்வி எழுப்பியிருந்தது. புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளனர். மதுபான கடைகள் திறக்கப்பட்டால் கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும் என்று திமுக அரசு கூறியிருந்தது. ஆனால், திமுக அரசு மதுக்கடைகளை வீதிக்கு விதி திறந்து வைத்தும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் மனு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், சட்டத்திற்கு முன்பு யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.
கட்சியை வலுப்படுத்த இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது எனவும் தெரிவித்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!