தேர்தலில் I.N.D.I.A கூட்டணியின் நிலவரம் என்ன? டிஆர் பாலுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 2:04 pm

தேர்தலில் I.N.D.I.A கூட்டணியின் நிலவரம் என்ன? டிஆர் பாலுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை திமுக பொருளாளரும், எமபியுமான டி.ஆர்.பாலு, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் வரவேற்றனர்.

சுமார் 1மணி நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். கழக பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் வடமாநில தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார். இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு ‘சீட்’ கிடைக்கும். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றியும் ஆலோசித்தார்.

சுமார் 1 மணி நேரம் அரசியல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். இந்த ஆலோசனையில் திமுக உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.

மேலும் படிக்க: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு!

அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.
அறிவாலயத்தில் உள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் அறை, முரசொலி மாறன் வளாகம் உள்ளிட்ட பல அறைகள் இடிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 296

    0

    0