எய்ம்ஸ் செங்கலை ரோட்டுல காட்டி என்ன பயன்? சாதனை சாதனைனு வாய்ல சொன்னா போதுமா? திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி சுளீர்!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2024, 8:37 pm

எய்ம்ஸ் செங்கலை ரோட்டுல காட்டி என்ன பயன்? சாதனை சாதனைனு வாய்ல சொன்னா போதுமா? திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி சுளீர்!

திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. – தி.மு.க. இடையேதான் போட்டி. தமிழ்நாட்டில் மூன்று கூட்டணிகள் உள்ளன. ஆனால் அ.தி.மு.க. – தி.மு.க. இடையேதான் போட்டி.

தி.மு.கவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது இல்லை. மதுரை எய்ம்ஸ் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்டி அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டியதுதானே. 38 எம்.பிகள் ஐந்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

நீட் தேர்வுக்கு காரணமே தி.மு.க. – காங்கிரஸ் தான். சாதனை, சாதனை என்று கூறினால் போதாது, செய்து காட்ட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம் என கூறினார்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!