மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? உங்களை நம்பித்தானே ஓட்டு போட்டேன் ; CM ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 11:13 am

மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? உங்களை நம்பித்தானே ஓட்டு போட்டேன் ; CM ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் உள்ள உழவர் சந்தை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்கு சேகரித்தார். நடைபயிற்சி மேற்கொண்ட அவர், உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார். முதல் அமைச்சருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

அப்போது காய்கறி விற்பனை செய்யும் பெண்ணிடம் வாக்கு சேகரித்த போது, அந்த பெண் மகளிர் உரிமைத் தொகை தனக்கு கிடைக்கவில்லை, நம்பிதானே ஓட்டு போட்டேன் என கூறினார்.

அதற்கு முதலமைச்சர், உங்கள் வீட்டில் அரசு பணியாளர் இருக்கிறார்களா என கேட்டார், அதற்கு ஆமாம், கணவர் அரசு வேலை செய்கிறார் என கூறினார். அதற்கு முதலமைச்சர், அரசு வேலை செய்பவர்கள் வீட்டில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என கூற, எனக்கு பதில் என் கணவர் சாப்பிட்டால் போதுமா சார் என கேள்வி கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சின்னியம்பாளையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 253

    0

    0