என்னங்க இது பாஜக அறிக்கையா? அண்ணாமலைக்கே இப்படியா? அமர்பிரசாத் ரெட்டிக்கு என்னாச்சு? நெட்டிசன்கள் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2023, 11:48 am

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை 28 ஆம் தேதி பாத யாத்திரையை தொடங்குகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த பாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் இதற்கான ஊடக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இதுகுறித்து பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரும், என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இணைப் பொறுப்பாளருமான அமர் பிரசாத் ரெட்டி மற்றும், தமிழ்நாடு பாஜக துணைத்தலைவரும் என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் பொறுப்பாளருமான K.S.நரேந்திரன் ஆகியோரது பெயருடன் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், “அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை EX-IPS அவர்களின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையானது, வரும் ஜூலை 28, வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது! இதனை மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்பது தாங்கள் அறிந்ததே ! இந்திய நாட்டை வளமான வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி எடுத்துச் சென்று கொண்டிருக்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மீண்டும் 2024ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவும், தமிழகமெங்கும் தாமரை மலரவும், தூய அரசியலை முன்னெடுக்கவும் இந்த யாத்திரையை எங்கள் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மேற்கொள்கிறார்!

இந்த பாதயாத்திரையின் ஊடக ஒருங்கிணைப்பாளரான திரு.ரெங்கநாயகலு, (தலைவர்,தமிழக பாஜக மாநில ஊடகப் பிரிவு) அவர்களுடன் இணைந்து, திரு.ராஜவேல் நாகராஜன் (நிறுவனர், பேசு தமிழா பேசு) அவர்கள் ஊடக இணை ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்! வாருங்கள், கை கோர்ப்போம், லஞ்சம் ஊழல் இல்லா தமிழகம் படைப்போம்!” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதில் அந்த அறிவிப்பின் முதல் வரியிலேயே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரிலேயே பிழையாக உள்ளது. இதனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 352

    0

    0