மத்த கட்சியை பத்தி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கு? அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது : அண்ணாமலை பளீச்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2023, 1:01 pm

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு செய்ய முடியாது.

கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும். அதிமுக – பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றியே முதன்மையான நோக்கம்.

திமுக – காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ளும் வகையில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும். இடைத்தேர்தல் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.

மேலும் ஈவிகேஎஸ் இளங்ககோவன் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மற்ற கட்சி பற்றி பேச ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.

  • Celebrities support Ajith in Dubai race இது துபாயா இல்ல…கோடம்பாக்கமா…அஜித் கார் ரேஷை பார்க்க போன திரைப்பிரபலங்கள்..!