மாணவர்கள் என்ன கப்பலிலா கல்லூரிக்கு போவாங்க? முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசு.. ஜெயக்குமார் காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2023, 11:18 am

மாணவர்கள் என்ன கப்பலிலா கல்லூரிக்கு போவாங்க? முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசு.. ஜெயக்குமார் காட்டம்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், கடல் போல காட்சியளிக்கிறது. மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கனமழை எதிரொலியாக, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, கலோரிகளுக்கு விடுமுறை அளிக்காதது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய அரசு!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும். மாணவர்கள்‌ என்ன கப்பலில் கல்லூரி செல்வார்களா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!