என்னது சங்கீதாவா? இந்த இழவுக்குத்தான் இந்தி வேண்டாம்னு சொன்னேன்.. அமைச்சர் துரைமுருகன் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 July 2024, 8:02 pm

கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், வழக்கறிஞர் அமைப்புகள் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றன.

ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட சட்டதிருத்தத்தின் படி, இந்தியத் தண்டனைச் சட்டத்தை (IPC) பாரதிய நியாய சங்கிதா (BNS) எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை(CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சங்கிதா (BNSS), எனவும், இந்திய ஆதாரச்சட்டத்தை (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) எனவும் இந்தியில் பெயர் திருத்தம் செய்து அதில் குறிப்பிட்ட மாற்றங்களையும் செய்துள்ளனர்.

இந்த புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், புதிய குற்றவியல் சட்டத்தின் பெயரை படித்து விட்டு, “என்னது சங்கீதாவா.? ” என பாரதிய நியாய சங்கிதா சட்டத்தின் பெயரை படித்துவிட்டு, ” இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம் என்று ஆதிகாலத்தில் இருந்து சொல்கிறோம்.” என விமர்சனம் செய்தார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தியை நேரடியாக திணித்தால் எதிர்ப்போம் என தெரிந்து, சட்டத்துறையில் தற்போது லேசாக திணித்துள்ளனர். பெயரில் மட்டுமல்லாது அதில் சில திருத்தங்களையும் செய்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக நீதிமன்றத்தில் இந்தி பெயரை உச்சரிக்க வேண்டும். அதன் பின்னர் நீதிமன்றத்தில் இந்தி பழக்கமாகிவிடும். அதற்காக தான் இந்த பெயர் மாற்றம். நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டத்தை சட்டத்திருத்தம் என்று பெயரில் திணிக்க பார்க்கிறார்கள்.

இதனை எதிர்த்து முதலில் குரல் எழுப்ப வேண்டியவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும். அவர் தான் இதனை ஆரம்பத்தில் அவர்களே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். இதனை உச்சநீதிமன்றம் குப்பை தொட்டியில் வீசியிருக்க வேண்டும். இது ஒரு சர்வாதிகார போக்கு என்று அமைச்சர் துரைமுருகன் உண்ணாவிரத போராட்டத்தில் பேசினார்.

  • Ajith did Cheated the famous actress quits cinema 90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!