நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை இன்று பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி மைசூரில் இருந்து வருகை தந்தார். முன்னதாக, இன்று காலை மைசூரில் இருந்து பந்திபூர் செல்லும் பிரதமர் அங்குள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை பார்வையிட்டார். அங்கு ‘Wildlife Photographer’ போல் அவதாரம் எடுத்த பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
பின்னர், காலை 9.35 மணிக்கு மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சாலை மார்க்கமாக புறப்பட்ட பிரதமர், அங்கு ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant whisperers’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவர்களிடம் உரையாடினார். மேலும், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைக்கு கரும்பு கொடுத்து, தும்பிக்கையை தடவிக்கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதியழகன் சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் வனத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவினை சிறப்பாக முடித்துவிட்டு மசினகுடியில் இருந்து மீண்டும் மைசூருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
This website uses cookies.