பாஜக ஆட்சியில் அமரும் போது பெண் குறித்து தவறாக பேசினால் நாக்கு இருக்காது, கை வைத்தால் கை இருக்காது : அண்ணாமலை பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2022, 10:00 pm

திமுக நிர்வாகி சைதை சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு குறித்து ஆபாசமாக பேசினார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சைதை சாதிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சைதை சாதிக் பேச்சை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தின் போது அண்ணாமலை பேசியதாவது, போலீசார் கைது செய்து அழைத்து சென்றாலும் எந்த பெண்ணும் பயப்படக்கூடாது.

தவறு செய்தவன் வெட்கப்படவில்லை. தட்டிக்கேட்பதற்கு நான் ஏன் வெட்கப்படவேண்டும். சாதிக் பாஷாவையும், பெண்களை பற்றி தவறாக பேசுவபவரையும் போலீசார் கைது செய்யவேண்டும். மழையை பொருட்படுத்தாமல் அருமை சகோதரிகள் நீங்கள் வந்துள்ளீர்கள்..
சென்னையில் இன்று நிறைய பேர் நீந்தி வந்திருப்பீர்கள். மழை வெள்ளத்தை பார்க்கும்போது யாரும் சாலையில் நடந்து வந்தது போன்று தெரியவில்லை.

பாஜக ஆட்சியில் அமரும்போது பெண்ணை பற்றி தவறாக பேசுவபவர்களுக்கு நாங்கு இருக்காது. கை வைப்பவர்களுக்கு கை இருக்காது. அப்படிப்பட்ட ஆட்சியை பாஜக கட்சி கொடுக்கும்.

யோகி மாடல் யோகி மாடல் என்று கேட்கிறீர்கள். யோகி மாடல் வேறு ஒன்றும் கிடையாது. உத்தரபிரதேசத்தில் யோகியின் மாடல் என்பது பெண்களின் மீது யார் கை வைக்கின்றார்களோ அந்த மனிதன் அங்கே இருக்கமாட்டான் என்பது தான் ‘யோகி மாடல்’.

அது சரியாக இருந்தால் தமிழ்நாட்டில் அனைத்தும் சரியாக இருக்கும் என்றார். இந்த ஆர்ப்பாட்டம் அனுமதியின்றி நடைபெற்றதால் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிரணி நிவாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!