பாஜக ஆபிசுக்கு எப்போ வரீங்க..? முன்கூட்டியே சொன்னால் பரிசு கொடுக்க தயாரா இருப்போம் : காங்கிரசுக்கு அண்ணாமலை பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 4:17 pm

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழ்நாட்டிற்கு சென்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தமிழர்கள் திருடர்கள் என்று மோடி பேசுகிறார். தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு வந்தால் திருக்குறள், இலக்கியம், இலக்கணத்தை பற்றி மோடி பேசுவார். மோடி பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக, சந்தர்ப்பவாதியாக பேசி வருகிறார்.

இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது. இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பா.ஜ.க. தமிழகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை.

மேலும் படிக்க: கெஜ்ரிவாலுக்கு மட்டும் கொடுக்கறீங்க.. ஹேமந்த் சோரன் வைத்த கோரிக்கை : நீதிமன்றம் போட்ட கிடுக்குப்பிடி!

ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டு மக்களிடம் மோடியும், அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், பா.ஜ.க அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம். வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ உடன் தற்போது தேர்தல் ஆணையமும் இணைந்து மோடி கூட்டணியில் பணியாற்றி வருகிறது.

அதனால் தான் மோடி எதை பேசினாலும் தேர்தல் ஆணையம் அதனை கண்டு கொள்ளவில்லை. கும்பகர்ணன் போல தேர்தல் ஆணையம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

பா.ஜ.க.வில் இருப்பவர்களுக்கு சூடு, சொரணை உள்ளதா ? மோடி, அமித்ஷா இருவரும் தமிழர்களை பற்றி இவ்வளவு பேசியுள்ளனர். ஒரு கண்டனத்தையாவது தமிழக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளார்களா? என செல்வப்பெருந்தகை பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது X தளப்பக்கத்தில், தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.

மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.

எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 303

    0

    0