தமிழிசை, எஸ்வி சேகர் மீது ஆக்ஷன் எங்கே? சாதி லாபிகளுக்கு அடிபணியலாமா? சீறும் திருச்சி சூர்யா!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2024, 5:29 pm
trichy
Quick Share

நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு பாஜகவில் உட்கட்சி மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு ஒரு சில நிர்வாகிகள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தனர்.

அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களை பாஜகவின் வார் ரூம் விமர்சித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டது.

இதில் ஒருகட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், இரண்டு மாநில ஆளுநராக இருந்தவருமான தமிழிசையை, அண்ணாமலை ஆதரவாளர் திருச்சி சூர்யா நேரடியாக விமர்சித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். மேலும் தமிழிசை பதவி காலத்தில் பாஜக வளர்ச்சி தொடர்பாகவும் கிண்டலடித்திருந்தார். இதனையடுத்து திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாண ராம அவர்களையும் நீக்கினீர்கள் நியாயம் ஏற்றுக் கொள்கிறேன்.

இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?

தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா?

தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதிற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய SVe.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா? சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா? எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது என திருச்சி சூர்யா பாஜகவை விமர்சித்துள்ளார்.

Views: - 137

0

0