படத்திற்கு ரிவியூ கொடுக்கறீங்க… எங்களுக்கு நீதி எங்கே? ஓட்டு போட்டது எங்க தப்பா? கொதித்தெழுந்த ராணுவ வீரர் : வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan20 May 2022, 8:33 pm
திருநெல்வேலி மாவட்டம் அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் பாறையில் சிக்கிய ஆறு பேரில் இதுவரை இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து குவாரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து ஆறாவது நபரான ராஜேந்திரன் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கல்குவாரி விபத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும் பேரறிவாளன் விடுதலையொட்டி வெளியான தீர்ப்பை பாராட்டியதும், பேரறிவாளனை நேரில் கட்டியணைத்து தழுவி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதே போல அவரது மகனும், எம்எல்ஏவுமான உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து படக்குழுவை பாராட்டினார். இதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் தொல்லியல் கண்காட்சியை தொடங்கி வைத்து தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் நீலகிரி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் உதகை மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார். இப்படி மாவட்டம் மாவட்டமாக செல்லும் முதலமைச்சர், கல்குவாரி விபத்து குறித்து நெல்லையில் முகாமிடதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் வெளியானது. இது குறித்து ராணுவ வீரர் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தென் மாவட்டம்னா HARE கூட மதிக்கமாட்டான்க pic.twitter.com/xPnUepPdHv
— Rajaraja (@Rajaraj54862765) May 20, 2022
அதில் நெஞ்சுக்கு நீதி படத்தின் விமர்சனம் குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாகவும் கல் குவாரி விபத்தில் 6வது நபர் இன்னும் கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில் அதை பற்றி செய்தி வெளியிடவில்லை, ஒரு வேளை தென்மாவட்டத்தை புறக்கணிக்கிறார்களே, ஓட்டுப்போட்ட மக்கள் தப்பா என குமுறியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.