பூத் ஏஜெண்டா வேலை செய்ததற்கு பணம் எங்கே? BJP பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர்!
Author: Udayachandran RadhaKrishnan26 April 2024, 3:59 pm
பூத் ஏஜெண்டா வேலை செய்ததற்கு பணம் எங்கே? BJP பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர்!
தென்சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக இருப்பவர் முத்துமாணிக்கம். இவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜக மண்டல தலைவர் ஜெகநாதன் என்பவர் வீட்டில் நாடாளுமன்ற தேர்தல் பணியாற்றியது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்தவர்கள், பூத் ஏஜென்டா வேலை செய்தோம்.. அதற்கான பணம் ஏன் கொடுக்கவில்லை என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதில் டிக்காராம், மாரியம்மாள், வெங்கட் ஆகியோர் முத்துமாணிக்கத்திடம் கடுமையாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
மேலும் படிக்க: ஓடும் பேருந்து முன்பு பாய்ந்த இளைஞர்.. தாய் கண்முன்னே நடந்த பரிதாபம் : திக் திக் VIDEO!
இது தொடர்பாக முத்து மாணிக்கம் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், பாஜகவினர் 8 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வாசு, ஜெயக்குமார் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.