2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு? சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகோதரர் ஓபன் டாக்!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2023, 10:54 am

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எப்போதும் தேர்தலில் யாருக்கும் ரஜினியின் ஆதரவு கிடையாதென அவரது சகோதரர் சத்யநாராயணன் ராவ் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 3 செயற்கைகோள் வெற்றிகரகமாக நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ நிறுவனம் தரையிரக்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.
சந்திராயன் 3 திட்டத்தின் இயக்குனராக உள்ள விழுப்புரத்தை பூர்வீகமாக கொண்ட வீரமுத்துவேலுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் விழுப்புரம் திரு வீக வீதியில் அவரது இல்லத்தில் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென் துருவத்தில் சந்திராயன் 3 தரையிரங்கி சாதனை படைத்ததற்கு வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை நடிகர் ரஜினி காந்தின் சகோதரர் சத்ய நாராயனண் ராவ் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த நடிகர் ரஜினி காந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக மகனை பெற்றுள்ளதாகவும், ரஜினியின் சகோதரர் ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும் திரையரங்குகளில் இன்றும் கூட்டம் அதிகரித்து காணபடுவதாக தெரிவித்தார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி ஆசிர்வாதம் பெற்றது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினியின் சகோதரர் ரஜினிக்கும் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவருக்கும் பல வருடங்களாக பழக்கம் உள்ளதால் மடங்களுக்கு செல்வது பாபாவை தரிசனம் செய்வது இமயமலை செல்வது போன்ற வழக்கை ரஜினி வைத்துள்ளார். அதனடிப்படையில் தான் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாக கூறினார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை எனவும் தேர்தலில் இப்போதும் எப்போதும் ரஜினியின் ஆதரவு இல்லை என தெரிவித்தார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 357

    0

    0