முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவா பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்தது, அவருடைய தந்தை விபத்தில் இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அண்ணாமலை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அண்ணாமலையின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவிததுள்ள சூர்யா சிவா, முகாமில் 8-ம் வகுப்பு மாணவிகள் 19 பேர் கலந்து கொண்டனர் அதில் 13 பெண் குழந்தைகள் கொடுத்து புகார் அடிப்படையில் போக்சோ வழக்கு பதியப்பட்டு பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு குழந்தை முக்கிய குற்றவாளி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்திகள் வெளிவரும் போது கமுக்கமாக வாயை பொத்திக் கொண்டிருந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை, தேவையில்லாத விஷயங்களுக்கு வாய் கிழிய பேசும் அண்ணாமலை, பத்திரிக்கையாளர்களை பார்த்தாலே ஊருக்கே வியாக்கியானம் பேசும் அண்ணாமலை,
ஒரு கண்டனத்தை கூட பதிவு செய்யாதது ஏன்? குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறாதது என்?
பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் எலி மருந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபருக்கு வக்காலத்து வாங்குறியே வெக்கமா இல்ல, சிவராமனின் தந்தை மதுபோதையில் கீழே விழுந்து விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் சிவராமனும், அவனது தந்தை மரணத்தின் ரகசியத்தை வெளிக் கொண்டு வர சிறப்பு புலனாய்வு தேவை என்று
சொல்லும் அளவுக்கு அண்ணாமலை மனசு மறுத்துப் போய்விட்டதா. உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு நடந்திருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா?
உங்களையெல்லாம் அரசியல் தலைவர் என்று சொல்லிக் கொள்வதற்கு உங்களுக்கே கூச்சமாக இல்லையா?
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பாஜககாரனுகளை காப்பாற்றிய பழக்க தோசத்தில், அடுத்த கட்சி பாலியல் குற்றவாளிக்கும் முட்டு கொடுக்கும் அளவுக்கு அண்ணாமலை இறங்கிவிட்டாரோ?உங்களை போல் இரக்கம் இல்லாத மனிதர்களுக்கு கண்டிப்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி புரியாது, தயவுசெய்து இனி நான் ஐபிஎஸ் பிடித்தவன் என்று கூறி அந்த மூன்று எழுத்துக்கு உண்டான மரியாதையை கெடுக்காதீர்கள் @annamalai_k
பெண்களுக்கு ஏதாச்சும் ஒன்று என்றால் கையை வெட்டுவோம் காலை வெட்டுவோம் என்று மேடைகளில் பேசக்கூடிய அண்ணாமலையும், சீமானும் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அண்ணாமலையின் இந்த வக்கிர மனநிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவ குழுவை அமைத்து பரிசோதிப்பது நல்லது என்று அரசாங்கத்தை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.