மாதம் ரூ.1000 உரிமைத்தொகை யாருக்கு? தொகை வழங்கப்படும் தேதியை அறிவித்த தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2023, 1:01 pm

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதில் மிக முக்கியம் வாய்ந்த, இல்லத்தரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்போடு இருந்து மாதம் ரூ.1000 உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியானது.

அதில், தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 வழங்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பலத்த கரவொலி எழுப்பினர். இந்தத் திட்டத்திற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வறுமை தொகைக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

NPHH -S, NPHH – NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே புதுமைப்பெண் திட்டத்தில் பெண் குழந்தைகள் 1000 ரூபாய் வாங்கினாலும், அவர்களின் அம்மாக்குகளுக்கும் இந்த நிதி உதவி அளிக்கப்படும். அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்காது. முதியோர் உதவித்தொகை பெற்றாலும், அந்த பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 450

    0

    0