தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? ஐபிஎஸ்க்கு பதில் ஐஏஎஸ்.. காங்கிரஸ் போடும் புதிய கணக்கு.. இன்று அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2023, 1:55 pm

தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? ஐபிஎஸ்க்கு பதில் ஐஏஎஸ்.. காங்கிரஸ் போடும் புதிய கணக்கு.. இன்று அறிவிப்பு!!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட உள்ளதாக கடந்த சில காலமாகவே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதன்படியே இன்று தலைவர் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சமயத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி உள்ளார். சரியாக கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்தான் இவருக்கு பதவி வழங்கப்பட்டது.

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நன்றாகவே செயல்பட்டது. சட்டசபை கூட்டணியில் பெரிய அளவில் இடங்களை கேட்டு பெற முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் நன்றாக போட்டியிட்டு இருந்தது. அதே சமயம் கூட்டணி கட்சியான திமுகவிற்கு கே.எஸ்.அழகிரிக்கும் இதில் லேசான உரசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் கட்சிக்கு உள்ளேயும் நிறைய கோஷ்டி மோதல்கள் நிலவி வருகின்றன. பொதுவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிறைய கோஷ்டி மோதல் இருக்கும். அந்த கோஷ்டி மோதல் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் வெளிப்படையாக வெடித்தது.

ஜோதிமணி எம்பி, கோபண்ணா போன்றவர்கள் பொது தளத்தில் வேட்பாளர் தேர்வு குறித்தெல்லாம் விவாதம் செய்தனர். இப்போது இந்த கோஷ்டி மோதல் உச்சம் தொட்டுள்ளது. அப்போதே காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில்தான் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் புதிய தலைவர் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. காங்கிரஸ் கமிட்டியில் இன்று அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழ் நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் தலைவராக செல்வப்பெருந்தகை உள்ளார். இவருக்கு பதிலாக மூத்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த பதவிக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் செல்வப்பெருந்தகையின் பதவி பறிக்கப்படுவதால், அவர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன.

சென்னையைச் சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இவர் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். 2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இவருக்கு போஸ்டிங் போடப்பட்டது.
உதவி ஆணையராக இவர் பணியாற்றினார். அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி