திமுக ஊழல் விவகாரங்கள் அண்ணாமலையின் கையில் எப்படி..? மத்திய இணையமைச்சர் கசிய விட்ட தகவல்..!!

Author: Babu Lakshmanan
16 June 2022, 12:13 pm

திமுக அரசு மீதான ஊழல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு யார் யாரெல்லாம் தகவல்கள் கொடுக்கிறார்கள் என்பது குறித்த தகவலை மத்திய இணையமைச்சர் முரளிதரன் வெளியே கூறியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்நிரமோடியின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், “அனைவருக்கும் வணக்கம். நான் மதுரைக்கு வந்ததில் பெருமை அடைகிறேன். மதுரை பண்பட்ட கலாச்சாரத்தின் தலைநகரம். இடையூராது இயங்கும் நகரம் மதுரை,” என தமிழில் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது :- பிரதமர் நரேந்திர மோடி 8 ஆண்டு கால ஆட்சியில் தமிழக மக்கள் மீது தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் பண்பாட்டை மொழியை மதிக்கும் பிரதமர் மோடி. மோடியின் இதயத்தில் இடம் பெற்றவர்கள் தமிழக மக்கள். பிரதமர் மோடி அரசுதான் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுகிறது.

இலங்கை தமிழகர்களுக்காக 60 ஆயிரம் வீடுகளை நரேந்திர மோடி அவர்களால் கட்டி கொடுத்துள்ளோம். மோடி அரசை தவிர இலங்கை தமிழர்களுக்கு இதுவரை வேறு கட்சிகள் செய்துள்ளதா..? 8 ஆண்டுகளில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை கொண்டு வந்த அரசு. ஒரு இலங்கை தமிழர்கள் இலங்கை சிறையில் இல்லை என்பதை பெருமையுடன் கூறுகிறேன்.

மோடியின் அரசு இளைஞர்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. மோடி ஆட்சியில் 70 ஆயிரம் புதிய தொழில் தொடங்குவோர் வந்துள்ளனர். மத்திய அரசின் திட்டத்தின் மூலம் இளம் இளைஞர் தொழில் தொடங்குவோர் உருவாகி உள்ளனர். மோடி அரசு வாழ்க்கை வசதிக்காக பல்வேறு திட்டத்தை கொண்டுவந்துள்ளார். பொருளாதாரம், கொரோனோவை எதிர்கொள்கிறோம். இத்தனை பிரச்சனைகளை கொண்ட நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 8 ருபாய்க்கு குறைத்த அரசு மோடி அரசு.

தேர்தல் போது தமிழக மக்களுக்கு திமுக அரசு சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றினார்களா.? அண்ணாமலை இருக்கும் வரை திமுகவினர் ஊழல் செய்ய முடியாது? திமுக அவர்களது குடும்பத்தினருக்காக சொத்துக்களை சேர்த்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 70 IAS அதிகாரிகளை மாற்றி உள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலில் அடிப்படையில் அண்ணாமலை திமுக அரசின் ஊழலை வெளியிட்டு வருகிறார். 70 IAS அதிகாரிகளை நம்பி அண்ணாமலை அரசியல் செய்யவில்லை. பாமர மக்களுக்காக, ஏழை, எளிய மக்களுக்காக இருந்து வரும் அண்ணாமலை தமிழக மக்களுக்கான அரசியல் நடத்துகிறார்.

இந்தியா போன்ற நாடுகளில் தமிழகம் போன்ற மாநிலத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை நடத்த முடியாது. 2047 இந்தியாவின் முதன்மையான நாடாக மாறுவது போன்று, தமிழ்நாட்டில் பாஜக வரவேண்டும். தமிழக மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள். ஊழல் அரசை தூக்கி எறிய பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தருவார்கள், எனக் கூறினார்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 726

    0

    0