வாடகைத் தாயாக இருந்தது யார்? தப்பிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி.. சிக்கிய மருத்துவமனை : தமிழக சுகாதாரத்துறை அறிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2022, 5:59 pm

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் பரவியது. இது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்த 13-ம் தேதி உயர்மட்ட விசாரணை குழு அமைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், சென்னையில் உள்ள மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்தது.

அதில் இத்தம்பதியர்கள் (இருவர் வயது) மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயற்கை கருத்தரிப்பு மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு தொழில்நுட்பம் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளது. மேலும் நயன் தாரா விக்னேஷ் சிவனிற்கு பதிவு திருமணம் 11.03.2016ல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-ல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார்.

விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டு 09.10.2022 அன்று நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் வழங்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!