ஈரோடு இடைத்தேர்தலில் வெல்வது யார்? முந்திய இபிஎஸ்… வெளியானது லயோலா கல்லூரியின் ரிப்போர்ட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 2:28 pm

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 31ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நடைபெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதில் 6 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி, மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்தது

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரையில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக கள ஆய்வு நடத்தினர். அது குறித்த முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 42% சதவீதத்தில் இருந்து 49% சதவீத வாக்குகள் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு 31% சதவீதத்தில் இருந்து 36% சதவீத வாக்குகள் பெற வாய்ப்பு இருப்பதாகவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 6.90% சதவீதத்தில் இருந்து 10 சதவீத வாக்குகள் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேமுதி, நோட்டா, மற்றும் பிற சுயேட்சை வேட்பாளர்கள் 5.58% சதவீத வாக்குகள் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் 76.58% சதவீதத்தில் இருந்து 85% சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் யாருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி என்ற ஆய்வில், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு 53% பேர் ஆதரவு தெரிவித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு 42% பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்த ஆய்வில் 50 பேர் ஈடுபட்டதாகவும் அதில் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் தெரிவித்தனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…