வணிகர் தினம் கொண்டாட்டம்…மொத்த விற்பனை கடைகள் அடைப்பு: வெறிச்சோடிய கோயம்பேடு சந்தை..!!

Author: Rajesh
5 May 2022, 9:25 am

சென்னை: வணிகர் தினத்தை முன்னிட்டு மொத்த விற்பனை கடைகள் மூடப்பட்டதால் கோயம்பேடு சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5ம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள் மூடப்படும் என வணிகர்கள் சங்கம் சார்பாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தையில் வணிகர் தினத்தை முன்னிட்டு மொத்த விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் கோயம்பேடு சந்தை வெறிச்சோடி காணப்படாது.

இருப்பினும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள காய்கறி, பழம் சில்லறை விற்பனை கடைகள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. நாளை முகூர்த்த நாள் என்பதால் பூ மார்கெட் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1216

    0

    0