திருநீறு பூசாத வள்ளலார் படங்களை வைப்பதில் திமுகவுக்கு என்ன ஆசை? தமிழக சமய அடையாளங்களை ஏன் மறைக்கிறீர்கள் : வானதி சீனிவாசன் கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2022, 1:45 pm

பொள்ளாச்சி புரவிபாளையத்தில், கோடி சுவாமி குருபூஜையில், பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்யவில்லை. அம்பேத்கர் மற்றும் அவருடன் இருந்த குழுவும் தான் முடிவு செய்தது.

இந்த நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் என, பா.ஜ.க சொல்கிறது. குறிப்பிட்ட மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை.
தாய்மொழி வழியிலேயே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பது தான் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சம். இப்படியான கல்விக்கொள்கையை எதிர்க்கின்றனர்.

வள்ளலாரின், 200வது பிறந்தநாள் விழாவை கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், வள்ளலாரின் சமய அடையாளங்களை மறைத்து படங்கள் வரைந்துள்ளனர். திருநீறு பூசாத அவரது படங்களை வைப்பதில் முதல்வருக்கும், தி.மு.க., அரசுக்கும் என்ன ஆசை என்று தெரியவில்லை.

வடலுாரில் பிரசாதமாக கொடுப்பதே திருநீறு தான். தமிழக மக்கள் பலரும் திருநீறு வைக்கின்றனர். திருநீறு தமிழகத்தின் சமய அடையாளமாக உள்ளது. தமிழகத்தின் சமய அடையாளங்களை மறைப்பதன் நோக்கம் குறித்து, தி.மு.க., அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ