‘அண்ணாமலை தான் அடுத்த CM’.. கடுப்பான அதிமுக ; பாஜக கூட்டணி முறிவுக்கு இவர்தான் காரணமா..? வெளியான தகவல்!!

Author: Babu Lakshmanan
30 September 2023, 10:34 am

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வருகிற 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வராக்குவது என பாஜக தலைமை கூறியதாலே பாஜகவுடன் முறிவு ஏற்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியம் குருவ ரெட்டியூர் பகுதியில் அண்ணா 115 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்திற்கு அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர்கள் பிஜி முனியப்பன் மற்றும் எஸ் மேகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், தற்போதைய பவானி சட்டமன்ற தொகுதியின் அதிமுக எம்எல்ஏவுமான கேசி கருப்பண்ணன், கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய போது, பாஜக அதிமுக இடையான கூட்டணி தற்பொழுது முடிவிற்கு வந்திருப்பதாகவும்‌, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்குவது என பாரதிய ஜனதா கட்சியின் தலைமை கூறியதன் காரணமாகவே, பாஜக அதிமுக கூட்டணி முறிவிற்கு வந்திருப்பதாகவும், இந்த முடிவிற்கு தமிழகம் முழுவதும் அதிமுக மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கொரோனா காலகட்டத்திலேயே பல லட்ச ரூபாய் நிதி உதவி மத்திய அரசிடம் இருந்து கிடைத்திருந்தாலும் கூட, அதற்காக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை பொறுத்து போனார், ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தற்போது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையின் வயது கூட இல்லாத சின்ன பையன் அண்ணாமலை மறைந்த எம்ஜிஆர் ஜெயலலிதா மற்றும் அண்ணா ஆகியவர்களை இழிவாக பேசுகிறார். இனிமேல் எந்த நிலையிலுமே பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக ஒரு போதும் கூட்டணி போகாது, என்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி