தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வருகிற 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வராக்குவது என பாஜக தலைமை கூறியதாலே பாஜகவுடன் முறிவு ஏற்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியம் குருவ ரெட்டியூர் பகுதியில் அண்ணா 115 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்திற்கு அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர்கள் பிஜி முனியப்பன் மற்றும் எஸ் மேகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், தற்போதைய பவானி சட்டமன்ற தொகுதியின் அதிமுக எம்எல்ஏவுமான கேசி கருப்பண்ணன், கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய போது, பாஜக அதிமுக இடையான கூட்டணி தற்பொழுது முடிவிற்கு வந்திருப்பதாகவும், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்குவது என பாரதிய ஜனதா கட்சியின் தலைமை கூறியதன் காரணமாகவே, பாஜக அதிமுக கூட்டணி முறிவிற்கு வந்திருப்பதாகவும், இந்த முடிவிற்கு தமிழகம் முழுவதும் அதிமுக மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனா காலகட்டத்திலேயே பல லட்ச ரூபாய் நிதி உதவி மத்திய அரசிடம் இருந்து கிடைத்திருந்தாலும் கூட, அதற்காக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை பொறுத்து போனார், ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தற்போது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையின் வயது கூட இல்லாத சின்ன பையன் அண்ணாமலை மறைந்த எம்ஜிஆர் ஜெயலலிதா மற்றும் அண்ணா ஆகியவர்களை இழிவாக பேசுகிறார். இனிமேல் எந்த நிலையிலுமே பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக ஒரு போதும் கூட்டணி போகாது, என்றார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.