4 வருஷம் கழித்து எங்க ஏரியாவுக்கு எதுக்கு வரீங்க..? எம்பி திருநாவுக்கரசை ரவுண்டு கட்டிய மக்கள்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2023, 4:29 pm

திருச்சி 29 வது வார்டு ஆழ்வார்தோப்பு பகுதிக்கு 4 வருடத்திற்கு பிறகு வருகை தந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்யை இஸ்லாமிய மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.

மக்களுக்கான தேவைகளை கூட கேட்டு நிறைவேற்ற முன்வராமல் ஓட்டு கேட்பதற்கு மட்டும் வந்துவிட்டு அதன் பிறகு தொகுதி பக்கம் தலை காட்டாத திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்பி மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ள நிலையில், ஆழ்வார்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் திமுக ஆதரவு பெற்று வெற்றி பெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

இங்கே மக்களுக்கு பாதிக்கும் வகையில் இயங்கி வரும் கேஸ் குடோனை உடனடியாக நிரந்திரமாக மூட வேண்டும் என்றும்,பீம நகர் மற்றும் ஆழ்வார் தோப்பு பகுதியை இணைக்கும் பாலம் மிகுந்த சேதமடைந்து உள்ளதால் பலமுறை கோரிக்கை வைத்தும் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை, எனவே உடனடியாக பாராளுமன்ற நிதியில் இருந்து புனரமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

முன்னதாக எம்.பியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பி பின்னர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை திருநாவுக்கரசர் சமாதானப்படுத்தினார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் தொடர்ந்து எம்பியை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 4வருடம் கழித்து நீங்கள் இப்பகுதிக்கு வருவதாகவும் ஓட்டு கேட்க தான் முன்பு வந்ததாக குறிப்பிட்டனர். இதில் டென்ஷனான எம்பி உங்கள் குறைகளை எம்எல்ஏ, மந்திரியிடம் போய் கூறுங்கள் இல்லை என்றால் என்னிடம் மனு கொடுங்கள் என்று தெரிவித்தார். இதனால் அப்பகுதி மக்களுக்கும் எம்பி உடன் சென்ற காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!