பிபின் ராவத் உயிரிழந்த போது பிரதமர் ஏன் நீலகிரிக்கு வரவில்லை? திமுக எம்பி ஆ.ராசா கேள்வி.!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 8:27 pm

பிபின் ராவத் உயிரிழந்த போது பிரதமர் ஏன் நீலகிரிக்கு வரவில்லை? திமுக எம்பி ஆ.ராசா கேள்வி.!!

உதகையை அடுத்த கேத்தி பாலாடா பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து தமிழ்நாட்டை நேசிப்பதாகவும், தமிழை நேசிப்பதாகவும் கூறுகிறார்.

மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் நட்டா பேசும்போது திமுகவும், ஸ்டாலினும் தமிழ்நாட்டை பிரிக்க பார்க்கிறார்கள் என்றும், தமிழ்நாடு தனியாக இருப்பதாகவும் தேசிய ஓட்டத்திற்கு வருவதில்லை என கூறினார்.

ஆனால் பாகிஸ்தான், இந்தியா மீது படை எடுத்த போதும், கார்கில் போரிற்காக நிதியை வழங்கியதும் கலைஞர் தான். எங்களுக்கா தேச ஒற்றுமை இல்லைய என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர் வரும் 10ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடி, பாரத் மாதா கி ஜே என்றும், தமிழை நேசிப்பதாகவும், கூறிவிட்டு செல்வார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது ஏன் அவர் நீலகிரி மாவட்டத்திற்கு வரவில்லை?

ராணுவத்திற்கு தேவையான வெடி மருந்துகளை உற்பத்தி செய்யும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்கு ஏன் இதுநாள் வரை பிரதமர் மோடி வருகை புரியவில்லை என்றும் அவர் பேசினார். மேலும் முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் உயிரிழந்த போது ஓடோடி வந்து தேசிய கொடியை போற்றி வீரவணக்கம் செலுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று பேசினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!