கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவது ஏன்? இலங்கை முன்னாள் தூதர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
4 ஏப்ரல் 2024, 7:47 மணி
Lanka
Quick Share

கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவது ஏன்? இலங்கை முன்னாள் தூதர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கச்சத்தீவு விவகாரம் குறித்த தகவலை சேகரித்து அதனை பொதுவெளியில் தெரிவித்தார். அதில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் இருந்த போது தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என குற்றம் சாட்டினார். இதனையே பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூறினர்.

கச்சத்தீவு குறித்து பாஜகவினர் திடீரென பேசிவருவது சந்தர்ப்பவாத அரசியல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தனர். 10 வருடமாக ஆட்சியில் இருக்கும் பாஜக தற்போது கச்சத்தீவு பற்றி பேசுவது ஏன் என்றும், என்ன செய்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அந்தவகையில் இலங்கை நாட்டின் முன்னாள் தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ இந்திய ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல் வெளியாகியுள்ளது.

அதில் அவர் கூறியதாவது, கள நிலவரப்படி பார்த்தால், தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. அதனை சரிசெய்ய தற்போது கச்சத்தீவு பிரச்னையைகூறி வாக்குகளை கவர பார்க்கிறது. இந்த கச்சத்தீவு பிரச்சனை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம் போட்டு முடிந்துவிட்டது எனவும் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சர், கச்சத்தீவு பற்றிய விவாதங்களை தற்போது மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. இது 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மத்திய அரசுடன் டெல்லியில் ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது என குறிப்பிட்டார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 216

    0

    0