குமரியில் 14 கேமராக்களுடன் பிரதமர் மோடி தியானம் செய்வது ஏன்? செல்வப்பெருந்தகை சந்தேகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 1:05 pm

மக்களவைத் தேர்தலில் இறுதி மற்றும் 7 ஆம்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில் தபால் வாக்குகளை கடைசியாக எண்ண கூடாது எனவும் தபால் வாக்குகளை முதலிலேயே எண்ண வேண்டும்.. எனவும் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகள் வெளியிடும் போது கும்பகர்ணனை போல தூங்கக்கூடாது.

குமரியில் இன்று நிறைவு தியானத்தில் ஈடுபட்டுள்ள மோடி , யாருடைய நலனுக்காக தியானம் செய்கிறார் 14 கேமராக்களோடு தியானம் செய்வது ஏன்??

இன்று மோடியின் தொகுதியான வாரணாசியில் தேர்தல் நடக்கும் நேரத்தில் பிரதமர் தியானத்தின் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கலைஞர் பெயரில் கட்டப்பட்ட நூலகங்களை கணினி மயமாக மாற்ற வேண்டும் என காங்கிரஸ் திமுகவுக்கு கோரிக்கை வைப்பதாகவும், யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்தியா கூட்டணி வெற்றி பெற இருக்கிறது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் முகவர்கள் வாக்கு எண்ணும்போது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் வாக்குச்சாவடியில் உள்ள முகவர்கள், இத்தனை நாள் உழைத்ததை விட வாக்கு எண்ணும் நளான ஜூன் 4 அன்று கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கூறினார்.

தேர்தல் அலுவலர்கள் அறிவிக்கும் வாக்கு சதவீதமும் வாக்கு பெட்டியில் உள்ள வாக்குகளின் சதவீதமும் சரியானதாக இருக்கிறதா என்பதை முகவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் .

கோவை மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் இளைஞரை தாக்கின் தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, சம்பவத்தில் யார் தவறு செய்தார்கள் என்பது விசாரணை மூலம் கண்டறிந்து உண்மையான குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்ககட்டும்.

மேட்டுப்பாளையம் சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் காவல்துறையின் புலன் விசாரணையில் தண்டிக்கப்படட்டும். இது தொடர்பாக கோவை எஸ்பியிடம் தொலைபேசியில் பேச உள்ளேன் என அவர் குறிப்பிட்டார் .

கோவை சம்பவத்தில் புகார் அளித்த இளைஞர் கௌதம் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது ஏன் செய்தியாளர் கேள்வி எழுப்பியவுடன் என்னை டீஸ் பண்ணாதீர்கள் என்று செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 274

    0

    0